24.9 C
Jaffna
January 23, 2025
Pagetamil
சின்னத்திரை

கொரோனா பாதிப்பு.. களத்தில் இறங்கி உதவும் சீரியல் நடிகை சரண்யா !

கொரோனா லாக் டவுனில் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார் சீரியல் நடிகை சரண்யா துராடி. கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பரவலை தடுப்பதற்காக லாக்டவுனும் போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உதவுதற்காக பிரபல சீரியல் நடிகை சரண்யா துராடி களமிறங்கி இருக்கிறார்.

கடந்த வருடம் கொரோனா லாக்டவுனுக்கு பிறகும் அவர் நடிக்க தொடங்கவில்லை. வயதான பெற்றோர் பாதுகாப்பிற்காக வீட்டிலேயே இருந்து அவர் ஒரு புத்தகம் எழுதி வந்தார். ஆனால் இந்த வருடம் களத்தில் இறங்கி அவர் உணவு தேவைப்படுபவர்களுக்கு வழங்கி வருகிறார்.

பிளாட்பாரத்தில் வாழ்பவர்கள் மட்டுமின்றி கொரோனா நோயாளிகள், வயதானவர்கள் என பலரும் உணவில்லாமல் தவிப்பதாக கூறும் அவர், ஒரு பெண் தனது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா அதனால் உணவு வழங்க முடியுமா என கேட்டார். அதற்கு பிறகு தான் Shore Women Society என்ற ஒன்றை தொடங்கி மக்களுக்கு உணவளிக்க தொடங்கி இருப்பதாக கூறுகிறார் சரண்யா. தினம்தோறும் ஐம்பது பேருக்கும் மேல் அவர் உணவளித்து வருகிறார்.

உணவு டெலிவரி செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவர் கூறி இருப்பதாவது..

“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவளிக்கும் சேவையில் 2 ஆவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறேன். லாக் டவுன் என்பதால் தினமும் காலையில் நானே வண்டியை எடுத்து கொண்டு உணவு பொட்டலங்களோடு கிளம்புகிறேன்.”

“இரட்டை மாஸ்க் மற்றும் சானிடைசர் பாட்டிலோடு தடுப்பூசி தந்த துணிவே துணையென்று கிளம்பினாலும் ஒவ்வொரு நாளும் தெரிந்த வட்டத்தில் நிகழும் மரணச் செய்தி கலக்கத்தை கொடுக்கிறது. பசித்த முகத்தில் தெரியும் நன்றியும் அன்புமே இந்த கடினமான சூழலை கடக்க உதவுகிறது.”

“நல் உள்ளங்கள் சிலர் தங்களால் ஆன நிதி அனுப்பி உணவளிக்கும் என் கரங்களுக்கு வலு சேர்த்து இருக்கிறீர்கள். அத்தனை பேருக்கும் என் மரியாதையும் பேரன்பும். தொடர்ந்து பசியாற்றுவோம்.”

இவ்வாறு சரண்யா குறிப்பிட்டு உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

படுக்கைக்கு அழைத்த சீனியர் காமெடி நடிகர்.. கேரவனுக்கு இரகசியமாக அழைத்த நடிகை!

Pagetamil

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

‘யானை மிதித்து சாகக் கிடந்தேன்… தூக்கிச் சென்றவன் என் மார்பை பிடித்து சுகம் கண்டான்’: பிரபல தமிழ் சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்!

Pagetamil

கணவனை பற்றி வதந்தி பரப்பாதீர்கள்

Pagetamil

Leave a Comment