பார்டர் படத்தை அடுத்து நயன்தாராவை வைத்து படம் பண்ணுகிறார் இயக்குநர் அறிவழகன் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் அது குறித்த உண்மை தெரிய வந்திருக்கிறது.
ஈரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அறிவழகன். அவர் அருண் விஜய்யை வைத்து பார்டர் படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் பார்டர் படத்தை அடுத்து நயன்தாராவை வைத்து படம் பண்ணப் போகிறார் அறிவழகன் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியது. இது குறித்து விசாரித்தபோது தான், அறிவழகனுக்கு அப்படி ஒரு ஐடியா இல்லை என்பது தெரிய வந்தது.
நயன்தாரா தற்போது தன் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்தது. கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பதால் விக்னேஷ் சிவனால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம் இது. நானும் ரௌடி தான் படத்தில் நடித்த விஜய் சேதுபதியும், நயன்தாராவும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் மீண்டும் சேர்ந்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.
இது நயன்தாராவுக்கு தெரியுமா, துரோகம் பண்ணாதீங்க விக்னேஷ் சிவன்: ரசிகர்கள்
முக்கோண காதல் கதை கொண்ட காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தாவும் இருக்கிறார். அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவர் தன் பட ஹீரோயினாச்சே என்கிற பாசத்தில் வீடியோ வெளியிட, நயன்தாரா ரசிகர்களோ அங்க என்ன நடக்கிறது என்று கூறி கிண்டல் செய்தார்கள்.
இதற்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. முன்னதாக அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக தர்பார் படத்தில் நடித்தார். அந்த படத்தை பார்த்த ரசிகர்களோ, நயன்தாராவை டம்மி பீஸாக்கிவிட்டார்கள் என்று குமுறினார்கள். ஆனால் சிறுத்தை சிவா அப்படி செய்ய மாட்டார் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.