24.8 C
Jaffna
January 8, 2025
Pagetamil
கிழக்கு

சுகாதார வழிமுறைகளை மீறிய இரு கடைகளுக்கு பூட்டு : 4 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் உத்தரவின் பேரில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அலுவலக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத மற்றும் காலவதியான உணவுவகைகளை விற்பனை செய்த கடைகள் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.நிஸ்தார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் என்.எம்.பைலான் ஆகியோரின் நெறிப்படுத்திலின் கீழ் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத கடைகள் பூட்டும் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களுக்கு திடீர் பரிசோதனை நடவடிக்கையும் இன்று மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத ஒரு ஆடை விற்பனை நிலையமும் சிறு கடை ஒன்றும் 14 நாள் மூடப்பட்டு வழக்குதாக்கல் செய்யப்பட்டதுடன் மேலும் பழுதடைந்த உணவு வகைகளை விற்பனை செய்த 2 கடைகளுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இக் கள விஜயத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக பல்நோக்கு அபிவிருத்தி செயலனி திணைக்களத்தின் பயிலுநர் குழுவும் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வாழைச்சேனையில் கசிப்பு வேட்டை

Pagetamil

கிழக்கு மாகாண சுற்றுலா துறையை மேம்படுத்த முயற்சி

east tamil

திருகோணமலையில் சதுப்புநிலங்கள் பாதுகாத்தல் தொடர்பான செயலமர்வு

east tamil

மட்டக்களப்பின் சுற்றுலா துறையை வலுப்படுத்தும் பணிகள் ஆரம்பம்

east tamil

கேரளா கஞ்சாவுடன் 34 வயதுடைய சந்தேக நபர் கைது

Pagetamil

Leave a Comment