25.9 C
Jaffna
December 13, 2024
Pagetamil
சினிமா

லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் யார் தெரியுமா வில்லன்! -விரைவில் படப்பிடிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்துவிட்டாராம். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி. ஒரு முன்னணி ஹீரோவாக இருந்து கொண்டு இப்படி விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரே, இவருக்கு என்னாச்சு என்று ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள். ஆனால் படம் வந்த பிறகு ஹீரோ விஜய்யை விட வில்லன் விஜய் சேதுபதிக்கு தான் கெத்தான கதாபாத்திரம் என்பது தெரிய வந்தது.

படத்தை பார்த்த விஜய் ரசிகர்களோ, இது என்னய்யா வில்லனை ஸ்கோர் பண்ண விட்டுட்டாங்க என்றார்கள். மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியை தேடி வில்லன் கதாபாத்திரமாக வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் கமல் ஹாசனை வைத்து தான் இயக்கும் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்குமாறு விஜய் சேதுபதியிடம் கேட்டார் லோகேஷ் கனகராஜ்.

ஏற்கனவே கை நிறைய படங்கள் வைத்திருப்பதால் லோகேஷ் கேட்டவுடன் பதில் சொல்லவில்லை விஜய் சேதுபதி. அதே சமயம் கமல் ஹாசனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற தன் ஆசையை அடக்கவும் முடியவில்லை. இதையடுத்தே விக்ரம் படத்தில் நான் வந்து வில்லத்தனம் செய்கிறேன் என்று லோகேஷ் கனகராஜிடம் கூறிவிட்டாராம் விஜய் சேதுபதி.

அவர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.மாஸ்டரை போன்று விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதிக்கு கெத்தான கதாபாத்திரமாக இருந்துவிடப் போகிறது. இந்த லோகேஷை நம்ப முடியாது, அதனால் சூதானமாக இருங்க ஆண்டவரே என்று ரசிகர்கள் கமலை எச்சரித்துள்ளனர்.

முன்னதாக முழு கதையையும் படித்துப் பார்த்த கமல் அதில் சில திருத்தங்களை செய்யுமாறு லோகேஷிடம் கூறினாராம். அவரும் கமல் சொன்ன திருத்தங்களை செய்துள்ளாராம். விக்ரம் படத்தில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் தயாரிக்கவும் செய்கிறார் கமல்.

தமிழக சட்டசபை தேர்தல் வேலையால் தான் விக்ரம் படப்பிடிப்பை தள்ளிப் போட்டார்கள். சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் தோல்வி அடைந்தார். தேர்தல் முடிந்த பிறகு அவர் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் விலகிவிட்டார்கள். அதை வைத்து பலரும் கமலை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

காதலரை கரம் பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்: விஜய் நேரில் வாழ்த்து!

Pagetamil

மனைவியை பிரிவதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு

Pagetamil

‘நடிகர் வடிவேலு குறித்து அவதூறு கூறமாட்டேன்’ – நீதிமன்றத்தில் சிங்கமுத்து உத்தரவாத மனு

Pagetamil

“நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம், ஆனால்…” – தனுஷ் குறித்து மனம் திறந்த நயன்தாரா!

Pagetamil

Leave a Comment