24.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
சினிமா

பெப்சி தொழிலாளர்களுக்கு 10 கோடி வழங்கிய நவரசா திரைப்பட தயாரிப்பாளர்கள்!

ஊரடங்கால் படப்பிடிப்புகள் எதுவும் நடக்காததால் முடங்கி போயுள்ள பெப்சி தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 10 கோடி வழங்கியுள்ளனர் ‘நவரசா’ திரைப்பட தயாரிப்ப்பாளர்கள் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் துறைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். சினிமா சம்பந்தமான படப்பிடிப்புகளுக்கும் தடை இருப்பதால், திரைத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக பெரும் தொகையை வழங்கியுள்ளது ‘நவரசா’ திரைப்பட குழு.

பிரபல முன்னனி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் கூட்டணியில் 9 கதைகளாக தயாராகி வருகிறது ‘நவரசா’. இந்த ஆந்தாலஜி திரைப்படம் நேரடியாக Netflix ல் வெளிவரவுள்ளது. கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜேய் நம்பியார் என முன்னணி இயக்குனர்களின் கூட்டணியில் 9 குறும்படங்களாக உருவாகி வருகிறது.

சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி, சித்தார்த், அசோக் செல்வன், அதிதி பாலன், ரேவதி, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், நித்யா மேனன், ரித்விகா உள்ளிட்ட முன்னனி நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான், இமான், ஜிப்ரான், கோவிந் வசந்தா உள்ளிட்டோர் இசை அமைத்துள்ளனர். சந்தோஷ் சிவன் மற்றும் சில ஒளிப்பதிவாளர்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர்.

‘நவரசா’ படத்தின் தயாரிப்பாளர்களான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இருவரும் இணைந்து ‘நவரசா’ படத்தினை தயாரித்ததன் மூலம் கிடைத்த வருமானத்திலிருந்து ரூபாய் 10 கோடியை பெப்சி தொழிலாளர்களுக்கு நிவாரணமாக வழங்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெப்சி தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி திரைத்துறை பணியாளர்களுக்கு உதவ சினிமா பிரபலங்கள் முன்வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் பெப்சி தொழிலாளர்களுக்கு உதவியுள்ள மணிரத்னம் மற்றும் ஜெயந்திராவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் அஜித் குமார் பெப்சி தொழிலாளர்களுக்காக ரூபாய் 10 லட்சம் வழங்கியிருந்தார். இதேபோல் திரையுலகினர் பலர் கொரோனா நிவாரண நிதிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 50 லட்சம் வழங்கினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

Leave a Comment