முள்ளிவாய்க்காலில் மீண்டும் சர்ச்சை!

Date:

முள்ளிவாய்க்கால்நினைவேந்தலிற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்றவர்களையும் பொலிசார் தடுத்து நிறுத்தினர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த அனுமதிக்கக் கூடாதென தடைவிதிக்க கோரி 27 பேரின் பெயர் குறிப்பிட்டு பொலிசார் மனு தாக்கல் செய்திருந்தனர். விடுதலைக் புலிகளை நினைவுகூரவும், கொரோனா விதிமுறையை மீறவும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.

பொலிசாரின் மனுவுக்கு எதிராக இன்று நகர்த்தல் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடந்தது.

இதில், சுகாதார விதிமுறைகளை மீறாமலும், புலிகளை நினைவுகூராமலும் அஞ்சலியை நடத்த நீதிமன்றம் அனுமதித்தது. அத்துடன், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பிலும் முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கு விதிக்கவில்லையென்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இதையடுத்து, பொலிசாரினால் தடையுத்தரவு பெறப்பட்டவர்கள், அரசியல் பிரமுகர்கள் என சிலர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு சென்றனர்.

அவர்களை பொலிசார், இராணுவத்தினர் வழிமறித்து, நினைவாலயத்திற்குள் நுழையக்சு கூடாதென வழிமறித்தனர். பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

நீதிமன்ற உத்தரவு தமக்கு இன்னும் கிடைக்கவில்லையென பொலிசார் கூறினர். இதனால் சிறிதுநேரம் சர்ச்சை உருவானது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...

அமெரிக்க- ஈரான் பேச்சில் முன்னேற்றமில்லை: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட உத்தரவிட்ட ட்ரம்ப்

இஸ்லாமாபாத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, ​​ஈரான் தனது அணுசக்தி லட்சியங்களைக்...

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்