சாவகச்சேரி நகரசபை செயலாளருக்கு கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
சாவகச்சேரி நகரசபை செயலாளர் கொரோனா தொற்றிற்குள்ளானது நேற்றைய பிசிஆர் அறிக்கையில் உறுதியானது. இதையடுத்து, நகரசபையில் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
கடந்த 13ஆம் திகதி சாவகச்சேரி நகரசபை அமர்வும் இடம்பெற்றது. இதிலும் செயலாளர் கலந்து கொண்டிருந்தார். சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்களையும் தனிமைப்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.