Pagetamil
இலங்கை

நினைவேந்தலை தடுத்து இனப்படுகொலையை மறைக்க முயலும் அரசு: கரைச்சி தவிசாளர் காட்டம்!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை உடைத்து மே 18 நிகழ்வுகளை இல்லாது செய்வதனூடாக தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படு கொலை ஒன்றை இலங்கை
அரசு புரியவில்லை என்பதை சர்வதேச ரீதியாக நிரூபிப்பதற்கு இலங்கை அரசு முயல்கின்றது என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக அமையத்தில் நேற்று (16) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற மே 18 நிகழ்வுகளை இந்த மண்ணிலே நிகழ்த்த
முடியாத வாரான ஒரு துப்பாக்கிய நிலை இந்த மண்ணிலே ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதனுடைய ஆரம்ப நிகழ்வாக முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே இருந்த நினைவு தூபி அழிக்கப்பட்டுள்ளதுடன் அந்த இடத்திலே நடுவதற்காக கொண்டுவரப்பட்ட இருந்த நினைவு கல் அகற்றப்பட்டு இருக்கின்றது என்பது மிக காத்திரமான செய்தியாக இருக்கின்றது.

இந்த நினைவுகளை அகற்றுவதன் மூலமும் நினைவு இடங்களை அழிப்பதன் மூலமும் தமிழர்களின் வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாக இருக்கும் மே 18 என்கின்ற அந்த வரலாற்று நினைவு நாளினை எமது தேசத்தில் இருந்து இல்லாமல் செய்து விடுவதாககான பெரும் முயற்சியினை சிங்களப் பேரினவாத அரசு எடுத்துள்ளது.

சிங்களப் பேரினவாத அரசின் உடைய பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை இப்போது பதவியேற்ற இருக்கின்ற கோத்தபாய அரசின் ஊடாக நாங்கள் காண்கின்றோம்.

சாதாரணமாக இது வரையும் நடந்த பல்வேறு விதமான நினைவு தினங்களுக்கு எல்லாம் பயங்கரவாத முலாம் பூசி பயங்கர வாதத்தினை மீள் எழுச்சி செய்வதற்காகவே இந்த நிகழ்வுகள் நிகழ்த்தப்படுகின்றன என்ற ஒரு செய்தியை அது வெளியிட்டு இருந்தது மாத்திரமல்லாமல் அதனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக அணுகி
அதனை தடுப்பதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற் கொண்டிருந்தது. அதன் காரணத்தினாலே பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பலர் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலவரம் இந்த மண்ணிலே காணப்படுகின்றது.

தற்பொழுது மே 18 நிகழ்வுகளை இல்லாது செய்வதனூடாக தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படு கொலை ஒன்றை இலங்கை அரசு புரியவில்லை என்பதை சர்வதேச ரீதியாக நிரூபிப்பதற்காக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இந்த மண்ணிலே
கொண்டாடப்பட கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது .

உண்மையில் யுத்தம் முடிந்து இன்று பல வருடங்கள் ஆகியும் இந்த அரசாங்கம் தான் பெற்ற வெற்றி மமதையில் இருந்து இன்னும் மீளவில்லை என்பதை தான் இந்த அரசாங்கம் நிரூபித்து வருகின்றது. சில சமயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் காலம் மிகச் சிறந்தது என்று எண்ணும் அளவிற்கு இன்றும் அரசாங்கம் இந்த மண்ணிலே மிகக் கொடூரமான ஒடுக்கு முறைகளை மேற்கொண்டு வருகின்றது.

கடந்த வருடங்களில் கூட இந்த கோவிட் -19 என்கின்ற பேரிடரை பயன்படுத்தி கொண்டு தமிழ் மக்களுடைய உரிமைகளை இல்லாத செய்கின்ற பல்வேறு விடயங்களை அது கையாண்டுள்ளது.

P 2 P எனப்படுகின்ற ஒரு சாதாரண ஜனநாயக ரீதியான போராட்டத்தினை தடுப்பதற்கும் அதன் பின்னால் வந்த தமிழ் மக்களுடைய எல்லா விதமான நினைவு நாட்களையும் தடுப்பதற்கும் கோவிட் -19 என்கின்ற ஒன்றை பாதுகாப்பு அரணாக இந்த அரசாங்கம் கையில் எடுத்து இருந்தது.

இப்பொழுது மே 18 நினைவு நாளினை நினைவு கூர்வதற்கு கூட கோவிட் -19 என்கின்ற ஒன்றினை கையில் எடுத்து பலருக்கு தடையுத்தரவை போட்டு வைக்கின்றது. குறிப்பாக அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கொன்று ஒழிக்கப்பட்ட பல்லாயிரம் கணக்கானவர்களுடைய உறவுகளின் உறவுகள் கூட விளக்கேற்றி அஞ்சலி செலுத்த முடியாத ஒரு நாடாக எதிர்வரும் மே 18 ஆம் திகதி உருவாக்கப்பட்டிருப்பது என்பது மிக கொடூரமான செய்தி. இவ்வாறான தடையினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் எனக் குறிப்பிட்டதுடன் எதிர் 18ஆம் திகதி அனைத்து தமிழ் மக்களும் தங்களது இல்லங்கள் தோறும் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் விளக்குகள் ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

அடுத்தடுத்து அம்பலமாகும் மோசடி விவகாரங்களில் தலைமறைவாகும் மஹிந்தவின் சகாக்கள்!

Pagetamil

கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் காரில் நசுங்கி பலி

Pagetamil

செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு எஸ்கேப்?

Pagetamil

பிரதேச செயலக உத்தியோகத்தரின் கதிரையை எடுத்து சென்றவருக்கு விளக்கமறியல்: அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!