26.3 C
Jaffna
December 29, 2024
Pagetamil
இந்தியா

வரும் 26ம் திகதி கறுப்பு தினமாக அனுசரிப்பு: விவசாயிகள் அறிவிப்பு !

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி துவக்கிய போராட்டம் ஆறு மாதங்கள் நிறைவடைவதை முன்னிட்டு வரும் 26ம் திகதி, கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள், 2020 நவ., 26ல் டில்லி எல்லையில் முற்றுகை போராட்டத்தை துவக்கினர். இந்நிலையில் விவசாய சங்கங்களின் தலைமை அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் பல்பீர் சிங் ரஜவல் கூறியதாவது:- வரும் 26ம் திகதியுடன் எங்கள் போராட்டம் துவங்கி ஆறு மாதங்கள் நிறைவடைகிறது. இதை குறிக்கும் வகையிலும், பிரதமராக மோடி பதவியேற்று அன்றுடன் ஏழு ஆண்டுகள் முடிவடைவதையொட்டியும், 26ம்திகதி, கறுப்பு தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அன்று, நாடு முழுதும் உள்ள மக்கள், தங்கள் வீடு, கடை, வாகனங்களில் கறுப்பு கொடி ஏற்றி, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெறாத வரை எங்கள் போராட்டம் ஓயாது.இவ்வாறு அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

75000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

east tamil

அட்டபகொல்லில் 1 வயது குழந்தையின் உயிரைப் பலியெடுத்த விபத்து

east tamil

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு

Pagetamil

Leave a Comment