kiலையக பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கண்டி மாவட்டத்தில் நேற்று 338 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கண்டி மாநகர எல்லைகளான மெனிகின்ன, தலத்துஓயா, கட்டுகஸ்தோட்ட, கலகெதர, கம்பளை மற்றும் பூஜாபிட்டிய பகுதியிலிருந்து தலா 20 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
COVID-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் 24 மாவட்டங்களில் இருந்து நேற்று புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
மாத்தளை மாவட்டத்தில் மட்டுமே நேற்று புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்படவில்லை.
களுத்துறை மாவட்டத்தில் 321 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கொழும்பு மாவட்டத்தில் 277 பேர் கண்டறியப்பட்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 228 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் இருந்து 173 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
கம்பஹா மாவட்டத்தில் இருந்து 184 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 104 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 98 பேர், இரத்னபுரி மாவட்டத்தில் இருந்து 94 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 82 பேர், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 81 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 72 பேர், மொனராகலை மாவட்டத்தில் இருந்து 64 பேர், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 41 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 33 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து 26 பேர், கேகாலை மாவட்டத்தில் இருந்து 23 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 19 பேர், மன்னார் மாவட்டத்தில் இருந்து 12 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து 11, வவுனியா மாவட்டத்தில் இருந்து10 பேர், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 5 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 4 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 3 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்த 15 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.