CORONA வைரஸை கண்டு பல நாடுகள் பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். சாதாரண மக்கள் முதல் பல திரை பிரபலங்கள் வரை தங்களால் முடிந்த தொகையை முதல்வரின் கணக்கிற்கு அனுப்பி விடுகின்றனர். சிலர் நேரில் சென்று மரியாதை நிமித்தமாக காசோலையை வழங்குகின்றார்கள்.
அந்த வகையில் சூர்யா, கார்த்தி, சிவகுமார், அஜித், இயக்குனர் முருகதாஸ், உதயநிதி, வெற்றிமாறன், திலீப் சுப்பராயன், என பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த தொகையை முதல்வருக்கு அனுப்பி உள்ளார்கள்.
இந்த நிலையில், தினகூலியை நம்பி இருக்கு சினிமா தொழிலாளிகளுக்கு மற்ற நடிகர்கள் தங்களால் முடிந்த உதவியை கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்பதற்கு முன்பாகவே அஜித் மற்றும் மணிரத்னம் ஆளுக்கு 10 லட்சம் கொடுத்து உள்ளார்கள்.
தற்போதைய செய்தி என்ன என்றால் நடிகர்களில் சூர்யா, கார்த்தி, சிவகுமார், அஜித்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் 25 லட்சம் ஸ்டாலினை நேரில் சந்தித்து காசோலையை கொடுத்துள்ளார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.