வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக நீரா டாண்டென் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டென் நியமிக்கப்பட்டுள்ளார். ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தபின் வெள்ளை மாளிகையின் நிர்வாக மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநராக நீரா டாண்டென் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
அதற்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவருக்கு பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது அதிபர் ஜோ பைடனுக்கான மூத்த ஆலோசகராக நீரா டாண்டென் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை நிர்வாக மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநராக நீரா டாண்டெனை நியமிக்க ஜோ பைடன் முடிவு செய்தபோது எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ஆளும் கட்சியான ஜனநாயக கட்சியிலேயே கூட எதிர்ப்புகள் எழுந்தன.
பைடன் ஆட்சிக்கு வந்தபின் கேபினட் பொறுப்புகளுக்கு நியமனம் செய்தவர்களில் நீரா டாண்டெனுக்கு மட்டுமே எதிர்ப்புகள் காரணமாக பதவி வழங்கப்படவில்லை. ஒபாமா ஆட்சிக்காலத்தில் அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையில் மூத்த ஆலோசகராக நீரா டாண்டென் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.