கேரள மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; ‘டவ் தே’ புயல்

Date:

‘டவ் தே’ புயல் காரணமாக கேரள மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, அரபிக்கடலில் லட்சத்தீவுக்கு அருகே உருவான மிகத்தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘டவ்தே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக கேரளா முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

கடல் கொந்தளிப்பால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மணிமலை ஆறு, அச்சன்கோவில் ஆறு உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், வரும் 17ம் தேதி வரை கேரளா முழுவதும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், திருவனந்தபுரம், எர்ணாகுளம் உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக பேரிடர் நிவாரண படையினர், கடற்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்