25.8 C
Jaffna
December 12, 2024
Pagetamil
ஆன்மிகம்

இன்றைய நாளுக்கான ராசிபலன் (16.05.2021)

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சிறப்பாக முடிப்பார்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் தொழில் முயற்சிகள் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றியடையும்.

சொத்து சம்பந்தமான முடிவுகள் ஈட்டுவீர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டு புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும் காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.

பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மட்டும் சற்று இழுபறியாக செல்லும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான தொரு காலம் இன்றைய நாள் வேலையில் இருப்பவர்கள் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு சம்பந்தமான நிகழ்வுகளை சந்திப்பர்.

ரிஷபம்

நண்பர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு வாகன வகையில் ஆதாயம் இருக்கும். ஒரு சிலர் புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்குவதைப் பற்றி திட்டமிடுவீர்கள்.

திருமண முயற்சிகள் மற்றும் சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று கவனம் தேவை குறிப்பாக கணித பாடத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆராய்ச்சி கல்வி களில் இருப்பவர்களுக்கும் வெளிநாடுகளில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் உண்டாகும்..

உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சாதிப்பார்கள். பிற்பகலில் உடல் அசதி அதிகமாக இருக்கும். இன்றைய இரவில் தூக்கம் நன்றாக கிடைக்கும் கணவன் மனைவி உறவு மேம்படும். பெண் பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள் ஆகும்.

மிதுனம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நாளாக அமைகிறது. குடும்பத்தில் உள்ள வயதானவர்களுடன் சர்ச்சை அனுசரித்துச் செல்ல வேண்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும் நிதி உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. நல்லோருக்கு அழகு சொல்லாமல் இருப்பது என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர்ப் பேச்சு பேசாமல் இருப்பது குடும்பத்தின் அமைதியைக் காக்கும். பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. சொந்தத் தொழில் செய்பவர்கள் சிறு சிறு பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்பு இருந்தாலும் வெற்றியை நோக்கிய பிரயாணம் ஆகவே இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பொறுமையைக் கைக் கொள்வது நல்லது. கோபத்தை குறைத்து குணத்தை பெருக்கிக் கொள்ளுங்கள். திருமணம் தொடர்பான காரியங்களில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கடகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். காதல் வயப்பட்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இன்றைய நாள் செல்லும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நலன் நன்றாக இருந்து வரும்.

வரவு செலவு தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமிகு காலமாகும். யோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும். உங்கள் கடின உழைப்பே நிர்வாகத்தினர் புரிந்துகொள்வர். இட மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

சொந்தத் தொழிலை பற்றிய சிந்தனை அதிகமாக வரும் சுயதொழிலில் இருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உண்டாகும் நாளின் பிற்பகுதியில் பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும் உறவினர் வருகை , அல்லது விருந்துக்கு செல்வது போன்ற மகிழ்ச்சிகரமான செயல்பாடுகள் இருக்கும்.

சிம்மம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் சுபமான ஒரு நாள் ஆகும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் நன்றாக விருப்பத்துடன் படிப்பர் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு செய்திகள் வந்து சேரும்.

புதிய பிரயாணங்களை பற்றி வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேலை மற்றும் விசா தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். காலமிது தனவரவு உண்டு. வாகன வகை மற்றும் உணவுப் பொருள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும்.

இரும்புத் தொழில் தொழில் கட்டிடத் தொழில் சர்வீஸ் தொழிலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளில் பல நல்ல விஷயங்களை பார்ப்பர். சுபகாரியப் பேச்சுக்கள் இனிதே நிறைவேறும். பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்கள் வருகை மற்றும் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும் அவர்கள் கல்விக்காக எடுக்கும். எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்.

சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உண்டு. வெளிநாடு வேலைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி கிடைக்கும். காலமிது இறையருளால் இன்றைய நாள் சிறப்பான நாளாக செல்லும்.

நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். தொழில்ரீதியாக நல்ல செய்திகள் வந்து சேரும். காலமிது புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மன மகிழ்ச்சி இருக்கும்.

கடன் பிரச்சனைகளால் ஒரு சில மன வருத்தங்கள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். புதிய கடன் முயற்சிகள் சற்று தாமதமாகும். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.

துலாம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இனிய நிகழ்வுகளும் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் அமைதி தவழும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவை உண்டாக வழி உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.

குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அவைகளில் நல்ல முடிவுகளை அடைய முடியும்.

வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு தாய் நாடுகளில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். விசா தொடர்பான காரியங்களை துவக்குவதற்கு இன்றுதான் நல்ல நாள் ஆகும்.

விருச்சிகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும்.. எதிர்கால சேமிப்பு களை உருவாக்குவது சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி காணும் நேரமது நிதி உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டுரைகள் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடும் காலம் இது. தன வரவு உண்டாகும் அலைச்சல்கள் வரும். இருப்பினும் அவற்றால் நன்மையே உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும் எதிர்பார்க்கும். கல்லூரிகளில் அல்லது உயர்கல்விக்கான இடங்கள் கிடைக்கும். சிறப்பான நாளாக இன்றைய நாள் இருக்கும் உடல் நலம் சீராக இருந்துவரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கூடும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

தனுசு

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு நாளாகவே செல்லும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. சிறுகுழந்தைகளை படிப்பதற்கு உட்கார வைக்கவே சிரமப்பட வேண்டிய நாள் இன்றைய நாள். பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். வாகன வகையில் ஆதாயம் உண்டு.

இரும்புத் தொழில் ரியல் எஸ்டேட் ஆயில் அண்ட் கேஸ் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சமமான நாளாக இருக்கும்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வர வாய்ப்பு உண்டு. உணவுப் பொருட்களில் கவனம் கொள்ளவும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பிரச்சனைகளை எதிர் கொண்டாலும் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் நாளின் பிற்பகுதியில் சுபகாரிய செய்திகள் வந்து சேர வாய்ப்பு உண்டு. தட்சிணாமூர்த்தியை வழிபட மகிழ்ச்சி பெருகும்.

மகரம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். நண்பர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும் குடும்பத்தில் மன மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

புதிய தொழில் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். நாளின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாகும். இருப்பினும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள் தன வரவு உண்டாகும். புது தொழில் முயற்சிகள் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.

தூர தேசங்களில் இருப்பவர்களுக்கு தாய்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும் திருமண காரியங்கள் சுப காரியங்கள் வெற்றிகரமாக முடியும். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் உண்டாகும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது ஆதாயம் பெறுவீர்கள்.

கும்பம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தாய் நாடுகளிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். காலம் இது விநாயகர் வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும். புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும். சொந்த தொழிலில் இருப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகளின் பாராட்டுரைகள் கிடைக்கும். உத்தியோக உயர்வுக்கான வழிமுறைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான சுபகாரியங்கள் இனிதே நடைபெறும். பெண்களுக்கு சிறந்ததொரு நாளாக இன்றைய நாள் அமைகிறது.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் குழந்தைகளால் மன அமைதி கிடைக்கும். சொத்து வகையில் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை ஏற்படும் தனவரவு உண்டு. அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சற்று கால தாமதம் ஆகலாம்.

மீனம்

நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகவே இருக்கும், மாணவர்களின் கல்வி மேம்படும். வெளிநாடுகளில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். சமுதாயத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

கடன் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் மன மகிழ்ச்சி உண்டு. குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை மனதை ஆட்கொள்ளும்.

கல்விச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சகோதரர் வர்க்கத்தார் அல்லது உடன் பிறந்தவர்களோடு சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இந்த நாள் அமைகிறது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறிதளவு பற்றாக்குறை இருந்து வந்தாலும் நாளின் பிற்பகுதியில் தன வரவு உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment