இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,26,098 பேருக்கு கொரோனா தொற்று!

Date:

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,26,098 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,26,098 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,43,72,907 ஆக அதிகரித்துள்ளது.தற்போது கொரோனா வில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 36,73,802 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனாவிலிருந்து 2,04,32,898 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிே நேரத்தில் கொரோனாவிலிருந்து 3,53,299 பேர் குணமடைந்தனர்.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 3,890 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,66,207 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 18,04,57,579 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 31,30,17,193 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 16,93,093 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன . இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்