ஆரோக்கியமாக சாப்பிட முடிவு செய்தால் உங்கள் சிற்றுண்டியைக் கூட ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும். ஆரோக்கியமற்ற தின்பண்டங்கள் அனைத்தையும் தவிரக்க முயற்சி செய்யுங்கள். அந்த வகையில் உங்களுக்கு உதவ இன்று ஓட்ஸ் வைத்து ஒரு டேஸ்டான ஆப்பம் எப்படி செய்வது என பார்க்கலாம். ஓட்ஸ் பிடிக்காதவர்கள் கூட இதனை ஆசையாக சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
2 கப் வறுத்த ஓட்ஸ் தூள்
2 கப் தயிர்
1/4 கப் தண்ணீர்
½ தேக்கரண்டி உப்பு
நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், கேரட், கொத்தமல்லி இலைகள்
1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தூள் ஓட்ஸ் மற்றும் தயிரை ஒன்றாக கலந்து, 20-25 நிமிடங்கள் தனியாக வைக்கவும்.20-25 நிமிடங்களுக்குப் பிறகு, இதில் தண்ணீர் சேர்க்கவும். அடுத்துநறுக்கிய காய்கறிகள், சுவைக்கு உப்பு போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
ஆப்ப சட்டியை சூடாக்கி, எண்ணெய் ஊற்றவும்.ஒரு கரண்டி மாவை மூற்றி கவனமாக ஊற்றி ஒரு மூடியால் மூடி ஊற்றி சுழற்றி மூடி வைக்கவும். 5-7 நிமிடங்கள் சமைக்கவும்.அப்பத்தை புரட்டி, மறுபுறத்திலும் சமைக்கவும். இதனைதேங்காய் அல்லது பச்சை சட்னியுடன் சூடாக பரிமாறவும்இந்த சிற்றுண்டி ஆரோக்கியமானது மட்டுமல்ல, நீண்ட நேரம் உங்களை முழுதாக வைத்திருக்கும்.