28.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

மன்னார் நகரில் இருந்து பொது விளையாட்டு மைதானம் வரையுமான ‘ஐ’ வேளைத்திட்டம் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ‘ஐ’ வேளைத்திட்டத்தின் கீழ் அகலப்படுத்தப்பட்டு காபட் வீதியாக மாற்றப்பட்டு வேளைத்திட்டம் இடம் பெற்று வருகின்ற நிலையில் இன்றயை தினம் சனிக்கிழமை காலை குறித்த வீதி அமைக்கும் பணிகள் நிபந்தனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ‘ஐ’ வேளைத்திட்டத்தின் கீழ் வீதி அகலப்படுத்தப்பட்டு காபட் வீதியாக மாற்றப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மன்னாரில் இருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானம் வரையான குறித்த வீதி அகலப்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதினால் குறித்த வீதி அமைக்கும் பணி தாமதமாகி வருகின்றது.

குறிப்பாக குறித்த வீதி அகலப்படுத்துவதினால் சில பிரச்சினைகள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் கடந்த வியாழக்கிழமை மாலை உரிய அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டதோடு, அப்பகுதியில் உள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

குறிப்பாக குறித்த வீதி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படும் போது அப்பகுதியில் உள்ள வீடுகள் சிலவற்றின் மதில் அகற்ற வேண்டிய நிலை காணப்படுகின்றது.

மேலும் குறித்த பகுதியில் கழிவு நீர் வடிகான் ஒன்றை அமைத்து வீதியை அகலப்படுத்தி செப்பனிடுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று (15) சனிக்கிழமை காலை குறித்த வீதியின் ஆரம்ப பணிகள் இடம் பெற்றது.

எனினும் மக்களின் எதிர்ப்பு காணப்பட்ட நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் குறித்த பகுதிக்கு சென்றதோடு, குறித்த வீதி அபிவிருத்தி பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக பயணத்தடை விதிக்கப்பட்ட நேரம் குறித்த வீதி அபிவிருத்தி பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை எவ்வாறு முன்னெடுத்தது??? என மக்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் , பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உற்பட உரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

எனினும் மன்னார் நகரில் இருந்து சுமார் 150 மீற்றர் வரையிலாக பகுதியில் உள்ள மக்கள் குறித்த வீதி அபிருத்தி பணியின் போது குறித்த வீதி அபிவிருத்திக்காக ஏற்படும் சேதங்களுக்கான நஸ்டஈட்டை வழங்கி , நடை பாதை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் போன்றவற்றை அமைத்தே குறித்த வீதி புனரமைப்பை முழுமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததோடு, மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

இந்த நிலையில் முதல் கட்டமாக இன்றைய தினம் சனிக்கிழமை (15) குறித்த வீதியின் முதல் கட்டமாக வீதி செப்பனிடும் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதோடு, ஏனைய பணிகளை எதிர் வரும் திங்கட்கிழமை (17) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெறும் கலந்துறையாடலின் பின் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இதே வேளை குறித்த வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒப்பந்த காரரினால் முன்னெடுக்கப்படும் ‘ஐ’ வேளைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஏனைய வீதிகளும் சரியான தர நிர்ணயத்தின் கீழ் அமைக்கப்படவில்லை என்றும் இதனை மேற்பார்வை செய்யும் தொழில் நுற்ப கம்பனியும் இவர்களுக்கு ஒத்துழைப்பதாகவும், இதற்கு பொறுப்பு கூற வேண்டிய வீதி அபிவிருத்தி திணைக்களம் பாராமுகமாக இருப்பதாகவும் பல துறை சார்ந்த வல்லுநர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதும் பல ஒப்பந்த காரர்கள் கருத்தில் கொள்ளுவதாக இல்லை எனவும், சேதமடைந்துள்ள வீதிகள் செப்பனிடப்படுவதினால் குறுகிய காலத்தில் இவ் வீதிகள் பழுதடைந்து போனால் மீண்டும் செப்பனிடுவதற்கு எத்தனை தசாப்தங்கள் ஆகின்றது என தெரியவில்லை.

எனவே ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்கின் கீழ் வீதியை தரமாக செப்பனிடப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி

east tamil

கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவு – சிவஞானம் சிறீதரன்

east tamil

பதுளைக்கு விஷேட ரயில் சேவை

east tamil

அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!

east tamil

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நீடிக்கும் – ருவன் செனரத் தகவல்

east tamil

Leave a Comment