40 நிமிடங்களில் 450 ஏவுகணை வீசி தாக்கியது இஸ்ரேல்: பற்றியெரிகிறது காசா

Date:

இஸ்ரேலிய இராணுவம் காசாவில் 150 இடங்களை குறிவைத்து ஒரே இரவில் 40 நிமிடங்களுக்குள் 450 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

அதேவேளை, வான்வழி தாக்குதல்கள் கண்மூடித்தனமாக இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுக்குமாடி கட்டிடங்கள், வாகனங்களை குறித்து இஸ்ரேல் கொடூர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இந்த கொடூர தாக்குதல்களில் ஏராளம் அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இன்று (14) வரை குறைந்தது 119 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 31 குழந்தைகள், 19 பெண்களும் அடங்குவதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 830 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலின் 5 விமானத்தளங்களில் இருந்து 160 விமானங்கள் இந்த “ஒரே இரவு“ தாக்குதலில் ஈடுபட்டன.

பாலஸ்தீனத்திலிருந்து ஹமால் அமைப்பினரால் ஏவப்பட்ட ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை தமது ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பான Iron Dome தடுத்து விட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.

அண்மைய நாட்களில், கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ரா மாவட்டத்தில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுk் இஸ்ரேலின் நடவடிக்கைகளை தொடர்ந்து இந்த பதற்றம் ஏற்பட்டது.

இஸ்ரேல் காசா எல்லையில் இராணுவத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளது. தரை வழி நடவடிக்கைக்கும் இஸ்ரேல் தயாராகி வருகிறது. 008-2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இஸ்ரேல்-காசா போர்களின் போது இதேபோன்ற ஊடுருவல்களை இஸ்ரேல் நிகழ்த்தியது.

காசா முனையில் விச வாயு தாக்குதலால் பலர் உயிரிழந்ததாகவும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்ந்து வருவதாக காசாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் இறுதி முடிவுகளை எடுக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்