வடமாகாணத்தில் இன்று 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் யாழ் மாவட்டத்தில் 52 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் தையிட்டி பகுதியில் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 21 பேரும், நெல்லியடி சுபாஸ் பேக்கரியில் 11 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இன்று வடமாகாணத்தில் 644 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.
இதில் யாழ் மாவட்டத்தில் 52 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 16 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேரும், வவுனியா மாவட்டத்தில் 2 பேரும், மன்னார் மாவட்டத்தில் 2 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.
தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். தையிட்டி திருமண நிகழ்வில் கலந்து கொண்டு, தனிமைப்படுத்தப்பட்டவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், நெல்லியடி சுபாஸ் பேக்கரியில் 11 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 6 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 பேர், சாவகச்சேரி வைத்தியசாலையில் 5 பேர், தெல்லிப்பளையில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.