தன் துணை மீதான பொசசிவாக இருப்பது ஒரு பக்கம் மிக மகிழ்ச்சியானதாக இருந்தாலும், அதுவே சில நேரங்களில் பாதகமானதாக அதாவது எதிர்மறையானதாக மாற வாய்ப்புள்ளது. தனக்கு மட்டுமே உரியவன் என்ற எண்ணத்தால் மற்றவர்களிடம் பேசக்கூட அனுமதிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட 4 ராசிகளை இங்கு விரிவாகப் பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் எப்போதும் ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான உறவை விரும்புகிறார்கள். தங்கள் உறவில் பாதுகாப்பற்றதாக உணரும் போது, துணை மீது அதீத ஈர்ப்பையும், ஆதிக்கத்தையும் செலுத்த விரும்புகிறார்கள்.
இவர்களின் சொந்தமான தன் துணை மீது அதீத அன்பும், பாசத்தையும் கட்டுப்பாட்டையும் செலுத்துவார்கள். மற்றவர்கள் ரிஷப ராசியின் துணை மீது உரிமை கொண்டாட நினைத்தால் சற்றும் பொறுத்துக் கொள்ள விரும்பமாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் தன் துணை மீது சற்று பொறாமை கொண்டவர்களாக இருப்பார்கள். தன் உரிமைக்குரியவர் கைவிட்டுப்போய்விடக்கூடாது என்ற பயம் கொண்டவர்கள். துணை மீது அதீத ஈர்ப்பு கொண்ட இவர்கள், அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்புகிறார்கள்.
எந்த ஒரு சிறிய விஷயத்திற்காகவும் துணையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியினர் பொதுவாகவே ஆதிக்க மற்றும் ஆளுமைத் திறன் கொண்டவர்கள். அதே போல் இவர்கள் தங்களின் திருமண வாழ்க்கை, காதல் விஷயங்களிலும் தாங்கள் நேசிப்பவர்களைப் பற்றி அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வார்கள் அதே போல ஆதிக்கம் செலுத்தவும் செய்வார்கள்.
தங்களின் உரிமையானவர்கள் என்ற எண்ணம் இருக்குமே தவிர எந்த ஒரு கெடுதலையும், மோசமான விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள். தங்களின் துணை மீது அதீத அன்பையும், பாசத்தையும் பொழிவார்கள்.
கடகம்
கடக ராசியினர் அதீத உணர் திறன் கொண்டவர்கள். இவர்களின் அன்பை பெரிதாக வெளிக்காட்ட மாட்டார்கள். இருப்பினும் தங்களின் விருப்பமான மற்றும் போற்றும் நபர்களைப் பற்றி மிகுந்த மதிப்பும், மரியாதை, அன்பை வைத்திருப்பார்கள். இருப்பினும் தங்களின் அன்பை புரிந்து கொள்ளாமல் துணையால் புறக்கணிக்கப்பட்டால், தன் உரிமைக்காகவும், அவர்களின் அன்பைப் பெற எந்த ஒரு எல்லைக்கும் செல்வார்கள். தன் அன்புக்குரியவர் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.