நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் இயங்காது.
இன்று இரவு 11 மணி முதல் திங்கள் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயண தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பேருந்துகள் இயக்கப்படாது என்று இலங்கை போக்குவரத்துசபை தெரிவித்துள்ளது.
இருப்பினும், அத்தியாவசிய சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆயுதப்படைகளுக்கு தேவைப்பட்டால் போக்குவரத்து சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1