தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு தலைவரகள் ‘தப்பியோட முயல்வதும், பொலிசார அவர்களை சுட்டுக் கொல்வது’மான சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
இன்று அதிகாலை இலங்கையின் பயங்கரமான பாதாள உலகத் தலைவரான கொஸ்கொட தாரக என அழைக்கப்படும் தாரக பெரேரா விஜேசேகர பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பேலியகொட சிறப்பு குற்றப்பிரிவின் தடுப்புக்காவலில் இருந்த, சமயத்தில் இந்த சம்பவம் நடந்தது.
“இன்று அதிகாலை மீரிகமவில் சில ஆயுதங்களை மீட்டெடுக்க தாரகவை அழைத்து சென்ற போது பொலிஸாரைத் தாக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, நேற்று முன்தினம் இரவு ஒரு பாதாள உலகக்குழு உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, கொஸ்கொட தாரகவின் சட்டத்தரணி, தாரகவின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.