24.7 C
Jaffna
December 16, 2024
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் கோர விபத்து: ஒருவர் பலி; இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று மாலை பெரியகல்லாறிலிருந்து மட்டக்களப்புக்கு வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியை கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்கு வந்துகொண்டிருந்த பஸ் மோதி தள்ளியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் அதில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விபத்தில் பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான அழகப்பர் மதிராஜ் (49) என்பவர் உயிரிழந்தார். அவரது சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பஸ்சின் சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருக்கோணமலை மட்கோ சந்தியில் வெள்ளம்

east tamil

கன்னியாவில் அபரக்கிரியைகளுக்கான அனுமதி

east tamil

திருகோணமலையில் ஆலய விக்கிரகங்கள் திருட்டு

east tamil

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

திருமலையில் இலக்கிய நிகழ்வு – “மனதில் உறுதி வேண்டும்”

east tamil

Leave a Comment