நாளை இரவு 11 மணி முதல் 17ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பயணங்களை தவிர மிகுதி பயணங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
மேலும், மேற்கு மாகாணத்தில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை எந்தவித இடையூறும் இன்றி தொடரலாம் என்று ராணுவ தளபதி தெரிவித்தார்.




