26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

மரணவீடு, திருமண பதிவில் 15 பேருக்கு அனுமதி: புதிய சுகாதார வழிகாட்டல்!

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள மே 31ஆம் திகதி வரையான புதிய சுகாதார விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

12.05.2021 முதல் 31.05.2021 வரை நடைமுறையில் இருக்கும்.

சுகாதார சேவைகள், பொலிஸ் மற்றும் முப்படை, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள், அத்தியாவசிய பொருட்களின் விநியோகஸ்தர்கள், அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்கள் – பயன்பாட்டு சேவைகள் போன்றவை, நேரடி குடும்ப உறுப்பினரின் மரணத்திற்கு (ஆதாரம் தேவை),  ஏற்றுமதி/ இறக்குமதியுடன் தொடர்புடையவர்கள் (ஆதாரம் தேவை) ஆகிய தரப்பினர் மாகாண எல்லையை கடக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறலாம். ஒரு வீட்டில் ஒருவர் மட்டுமே வெளியேறலாம். தேசிய அடையாள எண், ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் இலக்கங்கள்1,3,5,7,9 இல் முடியும் நபர்கள், ஒற்றை எண் திகதிகளில் வீட்டை விட்டு வெளியேறலாம். 0,2,4,6,8 எண்களைக் கொண்டவர்கள் இரட்டை எண் திகதிகளில் வீடுகளை விட்டு வெளியேறலாம்

பேருந்து, புகையிரதம் போன்றவற்றில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அளவான பயணிகளையே ஏற்ற முடியும். கார்கள், ரக்ஷிகளில் இருவர் மட்டுமே ஏற்றலாம். ஏனைய வகை பொதுப்போக்குவரத்து வாகனங்களில் ஆசனங்களிற்கு அளவானவர்களே ஏற்றலாம்.

கொரோனா தொற்று தவிர்ந்த ஏனைய காரணங்களில் உயிரிழப்பவர்களின் உடல்களை வைத்தியசாலையில் இருந்து ஒப்படைக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மரண நிகழ்வில் ஒரே தடவையில் ஆகக்கூடியது 15 பேர் மாத்திரமே பங்குப்பற்ற முடியும்.

திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பதிவு திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆகக்கூடியது 15 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதியின் இந்திய பயணம்

east tamil

வெளிநாட்டில் தனியார் பல்கலையில் பட்டம் பெற்றுவிட்டு, இலங்கையில் தனியார் பல்கலையை எதிர்த்த ஜேவிபி பிரமுகர்!

Pagetamil

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றிய தகவல்!

Pagetamil

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்.பியின் கல்வித் தகைமையில் சர்ச்சை!

Pagetamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

Leave a Comment