Pagetamil
சினிமா சின்னத்திரை

பிக் பாஸ் புகழ் நடிகர் சென்ராயனுக்கு கொரோனா!

பிக் பாஸ் தமிழ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சென்ட்ராயன். அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் பல சிறிய பட்ஜெட் படங்களில் காமெடியனாக நடித்து வந்தார் சென்ராயன்.

இந்நிலையில் சமீபத்தில் தான் விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் என்ற புது ஷோவில் பங்கேற்றார் அவர். அதில் அவர் ஜூலி உடன் சேர்ந்து நடனம் ஆடி இருந்தார்.

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்து உள்ளார் சென்ட்ராயன்.

“மக்களே.. வணக்கம் மக்களே.. உண்மையிலேயே நடிக்கல ஆவி புடிச்சிட்டு இருக்கிறேன். வாழ்க்கையில் நான் அனைத்தையுமே பாசிட்டிவ் ஆக தான் எடுத்துக்கொள்வேன். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும், சினிமாவில் ஜெயிக்க வேண்டும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என நான் பாசிட்டிவ் ஆக தான் பார்ப்பேன். இப்போ எனக்கே கொரோனா பாசிட்டிவ் ஆகி போச்சு.”

ஆரம்பத்தில் கொரோனா குருமா என ரொம்ப அசால்ட்டா ரொம்ப கேர்லெஸ் ஆக இருந்தேன். என்னையே இப்போது தாக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் மக்களே careful ஆக இருங்கள். நான் தற்போது என்னுடைய வீட்டில் அறையில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். மனைவி குழந்தை பக்கத்து அறையில் பத்திரமாக இருக்கிறார்கள். மனைவி மட்டும் அவ்வப்போது வந்து உணவு கொடுத்துவிட்டு செல்வார். கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் பெலோ. அதனால் எச்சரிக்கையாக இருங்கள். இவ்வாறு சென்ட்ராயன் அந்த வீடியோவில் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்

முந்தைய அஜித் படங்களின் வசூலை முறியடிக்குமா ‘குட் பேட் அக்லி’?

Pagetamil

ஒரு பாடலுக்கு மீண்டும் நடனமாடும் தமன்னா!

Pagetamil

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!