ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் சொந்த வாகனத்தில் பயணிக்கும் போது முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று தெரிவித்துள்ளது.
ஒரு தனியார் வாகனத்தில் ஒன்றாக பயணம் செய்யும் போது வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும் என்று பணியகம் கூறியது.
COVID-19 தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த வாகனத்தில் பயணம் செய்யும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட்டதை அடுத்து இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது இயக்குநரின் அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.
வெவ்வேறு குடும்பங்களை சேர்ந்த இருவர் வாகனத்தில் பயணம் செய்தால் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாது என்றும் பணியகம் மேலும் கூறியுள்ளது.
இருப்பினும், பயணத்தின் போது டாக்ஸி சேவைகள் உட்பட பொது போக்குவரத்தில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.