தேசிய அடையாள எண்களின் கடைசி இலக்கங்களின் அடிப்படையில் மட்டுமே பொதுமக்கள் நடமாட அனுமதிக்கும் நடைமுறை நாளை (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரவள்ளது.
வீட்டிலிருந்து ஒருவர் வெளியேற அனுமதிக்கப்படுவார். அது, தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். மே மாதம் 31ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும்.
தேசிய அடையாள எண், ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் இலக்கங்கள்1,3,5,7,9 இல் முடியும் நபர்கள், ஒற்றை எண் திகதிகளில் வீட்டை விட்டு வெளியேறலாம். இவர்கள் நாளை 13ஆம் திகதி வெளியில் செல்லலாம்.
0,2,4,6,8 எண்களைக் கொண்டவர்கள் இரட்டை எண் திகதிகளில் வீடுகளை விட்டு வெளியேறலாம். உதாரணமாக, நாளை மறுநாள் 14ஆம் திகதி.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த நடைமுறை பொருந்தாது.




