25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணம் மரவுரிமை மையம் அங்குரார்ப்பணம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சின்னங்களான மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றை பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்யும் நோக்குடன் யாழ்ப்பாணம் மரவுரிமை மையம் என்னும் அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மரவுரிமைச் சின்னங்களை பாதுகாப்பதற்கு ஒரு அமைப்பினை நிறுவுவதற்கு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மேற்கொண்ட முயற்சியினால் 11 நபர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட குறித்த அமைப்பு நேற்று நிறுவப்பட்டுள்ளது.

மாநகர முதல்வரின் தலமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மரவுரிமை மையத்தின் தலைவராக வரலாற்று துறை பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் யாழ்ப்பாணம் மரவுரிமை மையத்தின் உப தலைவர்களாக வைத்தியகலாநிதி பேராசிரியார் ரவிராஜ் மற்றும் நடராஜா சுகிதராஜ்,  செயலாளராக மருத்துவ பீட பதிவாளர் ராஜேந்திரம் ரமேஸ், துணைச் செயலாளராக பாசுப்பிரமணியம் கபிலன், பொருளாளராக பேராசிரியர் செல்வரட்ணம் சந்திரசேகரம், இணைப்பாளராக சிவகாந்தன் தனுஜன், பதிப்பசிரியராக வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மையத்தின் உறுப்பினர்களாக விஸ்வலிங்கம் மணிவண்ணன், விஸ்வபாலசிங்கம் மணிமாறன், பூவானசுந்தரம் ஆரூரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

பொது மக்களின் பங்களிப்புடன் இவ் அமைப்பு வரலாற்று சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும். எதிர்காலத்தில் வட கிழக்கு மாகாணங்கள் அனைத்திலும் உள்ள வரலாற்று சின்னங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் தற்கொலை

east tamil

ஜனாதிபதி அனுரகுமார திசா நாயக்க – இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

east tamil

யாழில் பேருந்து மோதி ஒருவர் பலி

Pagetamil

அர்ச்சுனாவுக்கு கடும் எச்சரிக்கையுடன் பிணை!

Pagetamil

Leave a Comment