28.4 C
Jaffna
March 9, 2025
Pagetamil
இலங்கை

பணிக்காலம் முடிந்து இலங்கை திரும்பவிருந்த அன்று கொல்லப்பட்ட இலங்கை பெண்: அதிர்ச்சி காரணம்!

குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து கொண்டிருந்தபோது சக பணிப்பெண்ணால் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்ணின் சடலம் நேற்று (09) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மஹாவவில் வசிக்கும் ஸ்வர்ணாவதி ஹெரத் (39) என்பவரின் சடலமே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

குவைத்திற்கு பணிப்பெண்ணாக 08.03.2018 அன்று  புறப்பட்டு சென்றார்.

இவருக்கு திருமணமாகி,15 வயது மகள் உள்ளார்.

ஸ்வர்ணவதி பணிபுரிந்த வீட்டில் மேலுமொரு எதியோப்பிய நாட்டு பெண்ணும் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார். இருவருக்கும் ஒரே அறையே வழங்கப்பட்டிருந்தது.

கடந்த மாதம் 13 ஆம் திகதி ஸ்வர்ணவதி தனது இரண்டு ஆண்டு பணியை முடித்துவிட்டு இலங்கைக்கு திரும்பத் தயாரானபோது எதியோப்பிய பணிப்பெண்ணால் தாக்கப்பட்டுள்ளார்.

ஸ்வர்ணவதியின் கழுத்து, கால், இடது கையின் ஆள்காட்டி விரல் மற்றும் வலது கையின் கட்டைவிரலில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளது. அவரது கழுத்தும் மோசமாக சேதமடைந்துள்ளது.

ஸ்வர்ணவதி வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அந்த வீட்டு பணி முழுமையாக தானே செய்ய வேண்டுமென்ற ஆத்திரத்திலேயே எதியோப்பிய பெண் கொலையை செய்துள்ளார்.

கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் நேற்று (09) சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

உடலைப் பெற அவரது கணவரும், மகளும் வந்திருந்தனர்.

பிரேத பரிசோதனை நடத்தவும், சடத்தை நீர்கொழும்பு பொது மயானத்தில் இன்று நடத்தவும் நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
4

இதையும் படியுங்கள்

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

அடுத்தடுத்து அம்பலமாகும் மோசடி விவகாரங்களில் தலைமறைவாகும் மஹிந்தவின் சகாக்கள்!

Pagetamil

கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் காரில் நசுங்கி பலி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!