24.7 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

நேற்று 15 மரணங்கள்!

இலங்கையில் நேற்று (9) கொரோனா தொற்றினால் மேலும் 15 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 801 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்-

பண்டாரகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 52 வயதுடைய பெண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே மாதம் 09 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் ஹைபோதைரொயிட் நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அம்பிட்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய பெண் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, குருதி நஞ்சானமை மற்றும் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கணேமுல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 46 வயதுடைய ஆண் ஒருவர், வெலிசறை காச நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகமை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், வடகொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, உக்கிர சுவாசக் கோளாறு, மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

குளியாப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 56 வயதுடைய ஆண் ஒருவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, உக்கிர சிறுநீரக சிதைவடைவு, கொவிட் நிமோனியா, உக்கிர சுவாசக் கோளாறு மற்றும் மாரடைப்பு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிபிலை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 59 வயதுடைய ஆண் ஒருவர், பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் புற்றுநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்கிரியாகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய பெண் ஒருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 62 வயதுடைய பெண் ஒருவர், குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 09 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பசறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய ஆண் ஒருவர், பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, உயர் குருதியழுத்தம், நீரிழிவு, நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

வஸ்கடுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

நேபொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 67 வயதுடைய பெண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போம்புவல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், மே 06 ஆம் திகதியன்று களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாவுத்துடுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 86 வயதுடைய பெண் ஒருவர், மே 06 ஆம் திகதியன்று களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கொழும்பு 07 (கறுவாத்தோட்டம்) பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 61 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மடோல்கெலே பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 57 வயதுடைய பெண் ஒருவர், மே 06 ஆம் திகதியன்று மடோல்கெலே மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று மற்றும் மாரடைப்பு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

Pagetamil

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

Leave a Comment