28.7 C
Jaffna
April 12, 2025
Pagetamil
இந்தியா உலகம்

காபூல் குண்டுவெடிப்பில் 50 பள்ளி மாணவிகள் பலி: இந்தியா கடும் கண்டனம்!

காபூல் குண்டுவெடிப்பில் 50 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மகளிர் பள்ளிக்கூடத்துக்கு வெளியே நேற்று முன்தினம் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 50 மாணவிகள் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் பள்ளி மாணவிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

புனித ரமலான் மாதத்தில் காபூல் மகளிர் பள்ளிக்கூடத்தில் நடந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். இளம் மாணவிகளை குறிவைத்து நடந்த இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் மீதான தாக்குதலாக அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் இளைஞர்களின் கல்விக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது.

அதேபோல் ஆப்கானிஸ்தானின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

அதிமுக- பாஜக: “இபிஎஸ் தலைமையில் கூட்டணி” – உறுதிசெய்த அமித் ஷா

Pagetamil

“தேசிய அளவில் அண்ணாமலைக்கு கட்சிப் பொறுப்பு” – அமித் ஷா உறுதி

Pagetamil

பாஜக மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்திரன்! – பின்புலம் என்ன?

Pagetamil

வரிப் போர்: ஹாலிவுட் படங்களை குறி வைக்கும் சீனா!

Pagetamil

இந்தியா அழைத்து வரப்பட்டார் மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணா – அடுத்து என்ன?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!