கொரோனா வைரஸ் பரவும் என்கிற ஆபத்தால், பதுளை பிரதேச சபை இன்று (10) முதல் இம்மாதம் 17ஆம் திகதி வரையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இப்பிரதேச சபையின் செயலாளரின் கணவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் ஏனையோருக்கும் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதால் ஒருவாரக் காலத்துக்கு சபையை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை மூடியிருந்தாலும், குப்பைகளை சேகரித்தல், சுத்தம் செய்தல், கிருமி நாசினி தௌித்தல் உள்ளிட்டப் பிரதேச சபையின் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1