குவைத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவரால் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி இவர் கொலைசெய்யப்பட்டார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவர் கொல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பெண்ணின் சடலம் நேற்றுக் காலை கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1