இந்தியா உலகம்

காபூல் குண்டுவெடிப்பில் 50 பள்ளி மாணவிகள் பலி: இந்தியா கடும் கண்டனம்!

காபூல் குண்டுவெடிப்பில் 50 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மகளிர் பள்ளிக்கூடத்துக்கு வெளியே நேற்று முன்தினம் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 50 மாணவிகள் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் பள்ளி மாணவிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

புனித ரமலான் மாதத்தில் காபூல் மகளிர் பள்ளிக்கூடத்தில் நடந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். இளம் மாணவிகளை குறிவைத்து நடந்த இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் மீதான தாக்குதலாக அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் இளைஞர்களின் கல்விக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது.

அதேபோல் ஆப்கானிஸ்தானின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அடுத்த 5 வருடங்களிற்கு கட்சியின் எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டேன் என்ற சிறிதரன்

Pagetamil

மெக்சிக்கோ குடியேற்ற தடுப்பு நிலைய தீவிபத்தில் 39 பேர் பலி

Pagetamil

இஸ்ரேல் உள்நாட்டு போரை தவிர்க்க நீதித்துறை மறுசீரமைப்பை நிறுத்துவதாக பிரதமர் அறிவிப்பு!

Pagetamil

கொரோனா முதலில் பரவியது எப்படி?: பிரான்ஸ் விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Pagetamil

ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!