இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 22 மரணங்கள் நேற்று (8) பதிவாகியுள்ளன. இதன்மூலம் மரணங்களின் எண்ணிக்கை 786 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள் வருமாறு-
ராகமை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே மாதம் 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடவத்தை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லேரியா வடக்கு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் நாட்பட்ட சிறுநீரக நோய் மற்றும் மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலவத்துகொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 80 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவுடன் இதயம் மற்றும் சுவாசத் தொகுதி செயலிழந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொரட்டுவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 67 வயதுடைய ஆண் ஒருவர், வேதர மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
லுணுகெட்டியமடித்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 05 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதியபெலல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய பெண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 05 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு 08 (பொரளை) பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனி நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புளத்கொஹுபிட்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 61 வயதுடைய பெண் ஒருவர், கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய பெண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 02 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 57 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 05 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹல்கிரன்ஒய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 80 வயதுடைய ஆண் ஒருவர், நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். மூளைக்கு குருதியோட்டம் பாதிக்கப்பட்டமை மற்றும் கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹொரம்பெல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், மினுவங்கொட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணேமுல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய பெண் ஒருவர், வட கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம், குருதியில் கொலஸ்ரோல் அதிகரித்தமை மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குருதெனிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடவத்தை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நுரையீரல் அழற்சி மற்றும் குடற்புண் நிலைமையால் உயிரிழந்துள்ளார்.
பிபிலை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 58 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகலவத்தை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய ஆண் ஒருவர், களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் குருதி நஞ்சானமை மற்றும் நீரிழிவு நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வலஹன்துவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
போத்தல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 78 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலகெதர பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவுடன் இதயம் சுவாசத் தொகுதி செயலிழந்தமை, சிறுநீரகம் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்னொருவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.