யாழ் மாவட்டத்தின், நெல்லியடி பொலிஸ் பிரிவில் பெண்ணொருவரை கடத்தி பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய காமுகர்கள் இருவர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர்.
சாமியன் அரசடி பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபடும் ஒருவரும், புத்தளத்தை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவருமே சரணடைந்துள்ளனர்.
காதல் விவகாரமொன்றை தொடர்ந்து இரண்டு வாரங்களின் முன்னர் கரணவாய் கிழக்கு பகுதியை சேர்ந்த பெண்ணும், அவரது 14 வயது மகனும் கடத்தப்பட்டனர்.
தலைமறைவான காதல் ஜோடியில், காதலியின் தாயாரே கடத்தப்பட்டார். காதலனின் தரப்பினரே கடத்தலில் ஈடுபட்டனர்.
காதலனின் மாமாவான கட்டுமான தொழிலில் ஈடுபடும் 48 வயதான நபர், தன்னிடம் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட சுமார் 8 கூலிப்படையினருடன் சென்று கடத்தலில் ஈடுபட்டார்.
கடத்தப்பட்ட சிறுவனை தமது வீட்டில் தடுத்து வைத்து காதலனின் பெற்றோர் தரப்பினர் அடித்து விசாரணை செய்துள்ளனர். எனினும், தகவலறிந்த பொலிசார் அன்றைய தினமே சிறுவனை மீட்டதுடன், சிறுவனை தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில், காதலனின் தந்தையை கைது செய்தனர்.
அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் 58 வயதான குடும்ப பெண்ணை கடத்திச் சென்ற காமுகர்கள், மோசமான பாலியல் சித்திரவதையில் ஈடுபட்டுள்ளனர். அவர் அடித்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார்.
மறுநாள் அதிகாலை 1.30 மணியவில் அவர் நெல்லியடி நகரில் இறக்கி விடப்பட்டார்.
அதன் பின்னர் கடத்தலில் ஈடுபட்ட காமுகர்கள் தலைமறைவாகி விட்டனர். நேற்று முன்தினம் தமது சட்டத்தரணி ஊடாக நெல்லியடி பொலிசில் சரணடைந்தவர். சுமார் ஒரு வாரமாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பதுங்கி இருந்துள்ளனர். தனமும் ஒவ்வொரு வீட்டில் தங்கியிருந்ததாக காமுர்கள் பொலிசாரிடம் வாக்குமூலம் விங்கியுள்ளனர்.
கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும், மோட்டார் சைக்கிளும் மட்டுவில் பகுதியிலிருந்து மீட்கப்பட்டன.
சட்டத்தரவி வீ.கௌதமன் முன்னிலையில் இருவரும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வெளிப்பட்டனர்.