தனக்கு விரைவில் திருமணம் என்று வெளியான தகவல் குறித்து அறிந்த நடிகையும், தயாரிப்பாளருமான சார்மி அது குறித்து சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
சிம்புவின் காதல் அழிவதில்லை படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் சார்மி. அவர் தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. ஆனால் தெலுங்கு திரையுலகம் அவரை ஏற்றுக் கொண்டது.
நடிகையாக ஒரு ரவுண்டு வந்த சார்மி தற்போது தயாரிப்பாளராக இருக்கிறார். பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படத்தின் தயாரிப்பாளர்களில் சார்மியும் ஒருவர்.
33 வயதாகும் சார்மிக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் அவருக்கு இந்த ஆண்டே திருமணம் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியது. சார்மிக்கு திருமணம் என்று தகவல் வெளியானது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
இந்நிலையில் சார்மி விளக்கம் அளித்துள்ளார். திருமண செய்தி குறித்து சார்மி சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
என் கெரியர் மற்றும் வாழ்க்கையின் சிறப்பான அத்தியாயத்தில் இருக்கிறேன். வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளும் அந்த தவறை மட்டும் ஒருபோதும் செய்ய மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
எனக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லை என்று சார்மி ஏற்கனவே பலமுறை தெரிவித்துவிட்டார். இந்நிலையில் தற்போதும் அதையே தான் கூறியிருக்கிறார். இந்நிலையில் திருமணமே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு என்ன நடந்தது சார்மி என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சார்மியும், த்ரிஷாவும் நெருங்கிய தோழிகளாவர். இந்நிலையில் த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சார்மி, அவர் சிங்கிளாக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இது தான் என்றார். அவரின் வாழ்த்தை பார்த்த ரசிகர்களோ, த்ரிஷாவை விரைவில் மணக்கோலத்தில் பார்க்கப் போகிறோம் என்று சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்?
அதே சமயம் த்ரிஷாவின் வருங்கால கணவர் யாராக இருக்கும் என்றும் யூகித்துக் கொண்டிருக்கிறார்கள். த்ரிஷாவின் திருமணம் குறித்து பேசிய வேகத்தில் சார்மிக்கு திருமணம் என்று தகவல் வெளியானது.
கடந்த 2015ம் ஆண்டு வெளியான ஜோதி லக்ஷ்மி படம் மூலம் தயாரிப்பாளரானார் சார்மி. அதன் பிறகு இயக்குநர் பூரி ஜெகந்நாத்துடன் சேர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். அவர்கள் தயாரித்த ஐஸ்மார்ட் ஷங்கர் தெலுங்கு படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.