கிழக்கு

பொலிஸாரும், இராணுவமும் இணைந்து மக்கள் மத்தியில் கொரோனா விழிப்பூட்டல்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தொடர்ந்தும் பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களை நாடு பூராகவும் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசத்தில் பொலிஸாரும், இராணுவமும் இணைந்து மக்கள் மத்தியில் கொரோனா நோய் தொடர்பான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கையை இன்று மேற்கொண்டனர்.

வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்பூட்டும் நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சீ.ஐ.சந்திரகுமார மற்றும் சித்தாண்டி இராணுவ படைப் பிரிவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

இதன்போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதுடன், முககவசத்தினை முறையாக அணியாத பலருக்கு இதன்போது பொலிஸாரினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கிரானில் காட்டு யானை தாக்குதலில் ஒருவர் பலி!

Pagetamil

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்ய மாநகர சபை அமர்வில் பிரேரணை

Pagetamil

மட்டக்களப்பில் 20 பேருக்கு தொற்று!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!