25 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இந்தியா

2960 மெட்ரிக் டன் ஒக்சிஜன்; பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்வே விநியோகம்!

185 டேங்கர்களில் 2960 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஒக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு ஒக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் விநியோகித்துள்ளன.அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஒக்சிஜனை இந்திய ரயில்வே தொடர்ந்து கொண்டு சேர்த்து வருகிறது.

இது வரை சுமார் 2960 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஒக்சிஜனை 185 டேங்கர்களில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது.

47 ஒக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் தங்களது பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், தேவையுள்ள மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஒக்சிஜனை மிகவும் குறைந்த கால அவகாசத்தில் கொண்டு சேர்ப்பதை இந்திய ரயில்வே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த செய்திக் குறிப்பு தயாராகிக் கொண்டிருக்கும் நேரம் வரை, கீழ்காணும் அளவில் மருத்துவ ஒக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது- மகாராஷ்டிரா (174 மெட்ரிக் டன்), உத்தரப்பிரதேசம் (729 மெட்ரிக் டன்), மத்தியப்பிரதேசம் (249 மெட்ரிக் டன்), டெல்லி (1334 மெட்ரிக் டன்), ஹரியாணா (305 மெட்ரிக் டன்) மற்றும் தெலங்கானா (123 மெட்ரிக் டன்).

தற்சமயம் 18 டேங்கர்களில் எடுத்து செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் 260 டன் திரவ மருத்துவ ஒக்சிஜன், மகாராஷ்டிரா, ஹரியாணா மற்றும் டெல்லியை விரைவில் சென்றடையும். மிகவும் துடிப்பான முறையில் ஒக்சிஜன் விநியோகிக்கப்பட்டு, தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காதலனை விசம் வைத்து கொன்ற யுவதிக்கு தண்டனை ஒத்திவைப்பு: பெண்ணல்ல பிசாசு என சாடல்!

Pagetamil

ரூ.6 கோடி மதிப்பிலான நகைகளுடன் மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா!

Pagetamil

சயிப் அலி கானை கத்தியால் குத்தியவர் கைது: சிக்கியது எப்படி?

Pagetamil

இந்திய தேர்தல் குறித்து மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம்!

east tamil

“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்” – தவெக தலைவர் விஜய் உருக்கம்

Pagetamil

Leave a Comment