25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

புதிய உச்சம்: நேற்று 19 மரணங்கள்!

இலங்கையில் மேலும் 19 கொரோனா மரணங்கள் நேற்று (7) அறிவிக்கப்பட்டுள்ளது. றாளொன்றில் இலங்கையில் பதிவான அதிகபட்ச கொரோனா மரண எண்ணிக்கை இதுவாகும்.

இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 764 ஆக உயர்ந்துள்ளது.

அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-

சுனந்தபுர பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடைய பெண் ஒருவர், குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் இரனவில கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த சிகிச்சை நிலையத்தில் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு, இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளவாலை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 05 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் மோசமான சுவாசக் கோளாறு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோன்கஹவெல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய ஆண் ஒருவர், கோங்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தம்புள்ள மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 05 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நிமோனியா, நாட்பட்ட நுரையீரல் நோய், நாட்பட்ட சிறுநீரக நோய் மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரத்மலானை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 86 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நிமோனியா, நாட்பட்ட நுரையீரல் நோய், நாட்பட்ட சிறுநீரக நோய், மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெஹியத்தகண்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 54 வயதுடைய பெண் ஒருவர், பண்டாரவெல இடைநிலை சிகிச்சை நிலையத்தில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவுடன் குருதி நஞ்சானமை மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதுளை, மயிலகஸ்தென்ன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பிந்துனுவெவ கொவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, மீண்டும் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட பின்னர் மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவால் குருதி நஞ்சானமை மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாதுவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவுடன் பல உறுப்புக்கள் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு 03 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 53 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரத்தொலுகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய ஆண் ஒருவர், வெலிசற மார்புச் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகமை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 45 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் மினுவங்கொட ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

68 வயதுடைய பெண் ஒருவர், மே 05 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம், நாட்பட்ட சிறுநீரக நோய், இதயநோய் மற்றும் காச நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போத்தல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய ஆண் ஒருவர், மே 06 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலபலாதெனிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 50 வயதுடைய ஆண் ஒருவர், ஆராச்சிகந்த கொவிட் சிகிச்சை நிலையத்தில் இருந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போத்தல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர், ஆராச்சிகந்த கொவிட் சிகிச்சை நிலையத்தில் இருந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்குலுகஹ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 80 வயதுடைய பெண் ஒருவர், மே 06 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிக்கடுவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய பெண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 06 ஆம் திகதியன்று கொவிட் 19 நிமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளார்.

அங்குலுகஹ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 07 ஆம் திகதியன்று கொவிட் நிமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா, ஹாவாஎலிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், மே 05 ஆம் திகதியன்று நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய ஆண் ஒருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 07 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட மோசமான சுவாசக் கோளாறு நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொழும்பு குற்றப்பிரிவு பொலிசாரின் சட்டவிரோத துப்பாக்கிச்சூடு… ரணில் வழங்கிய பணப்பரிசில்: சிஐடி புதிய விசாரணை!

Pagetamil

தமிழ் அரசு கட்சியின் முடிவுகளுக்கு ஏனையவர்கள் ஒத்துவர வேண்டுமென்பது முறையற்றது: செல்வம் எம்.பி

Pagetamil

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

வவுனியா குள ஆற்றுப்பகுதியில் அரச ஊழியரின் சடலம் மீட்பு

east tamil

திருமலையில் இலக்கிய நிகழ்வு – “மனதில் உறுதி வேண்டும்”

east tamil

Leave a Comment