கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியும்,
விற்பனையும் காரணமாக கிராமத்தில் அதிகளவு சமூக விரோத செயற்பாடுகள்
இடம்பெற்று வருகின்றமையை கட்டுப்படுத்தும் நோக்கில் கிராம இளைஞர்கள்
வெள்ளிக் கிழமை மேற்கொண்ட நடவடிக்கையின் போது கசிப்ப பைகற்றுக்கள்,
மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு
அழிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன் கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலக
அதிகாரிகள் சிலர் கடமையின் பொருட்டு கிராத்திற்குள் சென்ற போது கசிப்பு
உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்களாலும் பாவிப்பவர்களாலும்
அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அவதூறாக பேசியமை போன்ற செயற்படுகள் இடம்பெற்றமையினை தொடர்ந்து ஆத்திரமடைந்த இளைஞர்கள்
களத்தில் இறங்கி நடவடிக்கையினை மேற்கொண்ட போதே விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்பு பைகற்றுகள் மற்றும் கொள்கலனகள் என்பன கைப்பற்றப்பட்டதோடு அவை தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதோடு, சட்டவிரோத செயற்பாடுகளில்
ஈடுபடுகின்றவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.