24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
கிழக்கு

கல்முனையில் கூட்டமைப்பு நாடகம் ஆடுகிறது: பிரதேச செயலக அதிகாரிகளும் அரசியல்வாதிகள் போல நடக்க கூடாது!

கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நாடகமாடுகிறது. கடந்த அரசாங்கத்தில் அதனை தரமுயர்த்த வாய்ப்பிருந்தும் அதனை செய்யாமல், இப்பொழுது அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். கல்முனை அரசியல் செய்யும் விவகாரமல்ல. அது இனத்தின் இருப்புடன் தொடர்புடையது என தெரிவித்துள்ளார் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் வி.முரளிதரன்.

இன்று மட்டக்களப்பு, செங்கலடியில் ஊடகவிலாளர்களை சந்தித்து பேசும் போது இதனை தெரிவித்தார்.

கல்முனை பிரதேச செயலகத்தில் இருக்கின்ற அதிகாரிகள் தங்கள் வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பதை நான் மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன். பிரதேச செயலாளராக இருக்கலாம் யாராகவும் இருக்கலாம். அவர்களும் அரசியல்வாதிகள் போல் செயற்பட்டு இதை ஒரு பூதாகரமான பிரச்சனையாக உருவாக்குவதாக இருந்தால் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்பொழுது அண்மையில் அதிகமாக பேசப்படுகின்ற விடயம் இந்த கல்முனை பிரதேச செயலகம் விடயம்.. கடந்த காலத்தில் இந்த கல்முனை பிரதேச செயலக பிரச்சனையை சிறந்த முறையில் முன்னெடுத்து ஜனாதிபதி மற்றும் உரிய அமைச்சர்களுக்கு பிரதம மந்திரி மற்றும் பல துறை சார்ந்த அதிகாரமிக்க அமைச்சர்களிடம் அனைவரிடமும் நாம் இந்த விடயம் தொடர்பாக முன்னெடுத்து வந்தோம். இந்த வேலை திட்டம் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது உண்மையில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகூட. இது நீண்டகால பிரச்சனையாக உருவெடுத்து தற்பொழுது முடிவுறும் தருவாயில் இதற்கான முடிவுகளை நிறைவேற்றும் அல்லது முடிவுறும் கட்டத்தில் அரசு தள்ளப்பட்டுள்ளது. இதை அறிந்து கொண்டு பல அரசியல்வாதிகள் இதை அரசியலாக்கி அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளை கவர்வதற்காக இந்த பிரதேச செயலகத்தை பயன்படுத்தி இன்று அனைவரின் வாயைத் திறந்தால் அதுதான் கதையாக உள்ளது.

இது அம்பாறை மக்களின் வாக்கு பிரச்சனை அல்ல. எமது இனத்தின் இருப்பை பாதுகாப்பதற்கான ஒரு பிரச்சனை. ஆகவே இந்த இடத்தில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவன் நான்.. இது தொடர்பாக எங்களுடன் சேர்ந்து அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

பாராளுமன்றத்தில் இருக்கின்ற தமிழ் பிரதிநிதித்துவங்கள் அனைவருக்கும் இது சம்பந்தமாக கதைப்பதற்கு உரிமை உள்ளது. ஆனால் அதை உரிய முறையில் நாகரீகமான முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் எனது அன்பான வேண்டுகோள். அதற்காக அவர்கள் ஒத்துழைத்து வருபவர்களாக இருந்தால் நாம் அதை உண்மையிலேயே வரவேற்கின்றோம்..

அனைவரது ஒத்துழைப்பும் இதற்கு தேவைப்படுகின்றது. அதைவிடுத்து நான் தான் இதை செய்கின்றேன் நான் தான் இதை செய்கின்றேன் என போட்டி போட்டு தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு கேலிக்கூத்தாக்காமல், அனைவரும் அணிதிரண்டு ஒன்றாக இந்த கல்முனை பிரதேச செயலகத்தில் ஒன்றாக நிற்க வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடகமாடுகிறது. கடந்த அரசாங்கத்தில் ஆட்சியை மாற்றுகின்ற அல்லது ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்தும் கல்முனை விடயத்தை அவர்கள் செய்யமுடியாமல் போனது. அன்று அவர்கள் நிபந்தனைகளுடன் பலமாக இருந்து இருந்தால் அதை இலகுவாக நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் தற்பொழுது அது சம்பந்தமாக பிரச்சாரத்தை மேற்கொள்வது தொடர்பான விவாதத்தை மேற்கொள்வதும் ஏமாற்றிவிட்டார்கள் என்றே பார்க்கின்றோம்.

ஆகவே அனைத்து மக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும். அம்பாறை மாவட்ட மக்களுக்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன். ஜனாதிபதியாக இருக்கலாம், பிரதம மந்திரியாக இருக்கலாம் யாரையும் நான் சந்திக்கின்ற போதும் இந்த கல்முனை பிரதேச செயலக விடயத்தைதான் நான் முதலாவதாக பேசுகின்றேன். அமைச்சர் சமல் ராஜபக்சவும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரங்கள் தயாரித்து கொண்டிருக்கின்றார். இது தொடர்பான அனைத்து விளக்கங்களும் விபரங்கள் அவரிடம் உள்ளது. நாம் அதை அவரிடம் வழங்கி இருக்கின்றோம்.

கல்முனை பிரதேச செயலகத்தில் இருக்கின்ற அதிகாரிகள் தங்கள் வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பதை நான் மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன். பிரதேச செயலாளராக இருக்கலாம் யாராகவும் இருக்கலாம். அவர்களும் அரசியல்வாதிகள் போல் செயற்பட்டு இதை ஒரு பூதாகரமான பிரச்சனையாக உருவாக்குவதாக இருந்தால் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். ஆகவே இவ்விடத்தில் அனைவரும் பொறுமையாக இருந்து செயற்பட வேண்டும் என்பதை நான் மிகவும் அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அவர்களின் வாயால் வழங்கப்பட்ட வாக்குறுதி பிரதம மந்திரியால் அளிக்கப்பட்ட வாக்குறுதி. இதை ஒரு அரசு கூறிவிட்டு மக்களை ஏமாற்றும் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாமும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

அதன் காரணமாகத்தான் நாம் அடித்து கூறுகின்றோம் இதை நிறைவேற்றுவதற்கு வேண்டிய ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றது. ஆகவே இதை அரசிடன் நான் வலியுறுத்தி இருக்கின்றோம். இதற்காக அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்து நிற்க வேண்டும் என்பதுதான் எமது அன்பான வேண்டுகோள்.

உண்மையிலேயே இந்தப் பிரதேச செயலக விடயம் தரம் குறைக்கப்படவில்லை. ஏற்கனவே ஒரு பத்திரம் இருக்கின்றது 1993-ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட ஒன்றாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பும் உள்ளது. தற்பொழுது திடீரென்று இந்தப் பிரச்சனை பூதாகரமாக அதற்கு இதுவும் ஒரு காரணம் ஏனென்றால் இந்தப் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட்டது ஆககருதப்பட்டால் பல விடயங்களை செய்ய முடியாமல் இருக்கும். அதற்காக இதை ஒரு உப செயலகம் என்ற அடிப்படையில் தெரியப்படுத்தி அதற்கான சகல விபரங்களையும் தற்பொழுது மாவட்ட அரசாங்க அதிபருக்கு கட்டளையாக வந்திருக்கின்றது. இந்த கல்முனை பிரதேச செயலகத்தின் அனைத்து விளக்கங்களையும் விடயங்களையும் எல்லை நிர்ணயங்கள் தொடர்பான விடயங்கள் பற்றியும் அனுப்பி வைக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைவரும் அரசாங்க அதிபருடன் உரையாடலாம். அவருடன் உரையாடினால் இது தொடர்பான விடயங்கள் தெரியும். இது ஒரு பாதிப்பை தரப்போவதில்லை. ஆகவே இது சம்பந்தமாக பல தடவை நான் அமைச்சரவையில் கலந்துரையாடி உள்ளேன். அவர்கள் இதுபோன்ற தகவல்களை ஏதும் தெரிவிக்கவில்லை. தரம் உயர்த்துவது என்றுதான் வாக்குறுதி அளித்துள்ளனர்.

எம்மைப் பொறுத்தவரையில் மக்களை ஒரு அரசியலுக்காக பகடைக்காயாக பயன்படுத்துவதை நாம் விரும்பவில்லை. ஏனென்றால் எமது மக்களின் உரிமை எமக்கு மிகவும் முக்கியமான விடயம். தமிழ் மக்களின் இருப்பை தக்கவைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான விடயம். அதற்காகத்தான் நாம் குரல் கொடுத்து வருகின்றோம். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். ஏற்கனவே நான் கூறியதைப் போன்று கல்முனை பிரதேச செயலகம் என்பது தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கான ஒரு விடயம். ஆகவேதான் அதை அவ்வாறுதான் அனைத்து அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டுமே ஒழிய தேவையற்ற விதத்தில் ஒரு பிரச்சார நோக்கத்திற்காக இதை பயன்படுத்துவது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செயலமர்வு

east tamil

திருக்கோணமலை மட்கோ சந்தியில் வெள்ளம்

east tamil

கன்னியாவில் அபரக்கிரியைகளுக்கான அனுமதி

east tamil

திருகோணமலையில் ஆலய விக்கிரகங்கள் திருட்டு

east tamil

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

Leave a Comment