29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

வற்றாப்பளை பொங்கலில் பொதுமக்கள் கலந்து கொள்ள தடை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போதைய கொவிட் 19 நிலமைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் இன்று(7) ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தினார்

இதன்போது கருத்து தெரிவித்த அவர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள் 101 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

மாங்குளம் தள வைத்தியாசாலையில் சிற்றூழியராக பணியாற்றி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அதனுடன் தொடர்புடைய 12 பேர் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாங்குளம் மருத்துவமனை செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் நடைபெற்றுக்கொண்ருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிற்றூழியர் ஒருவருக்கும் தொற்று இனம் காணப்பட்டுள்ளது. மாஞ்சோலை மருத்துவமனையில் தொற்று பாதுகாப்பு தொடர்பில் பிராந்திய சுகாதார பணிமனையினர் வைத்திய அதிகாரிகள் மேலதிக நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட பொது மக்களுக்கான அறிவித்தாலாக அனாவசியமாக வீ திகளில் செல்ல வேண்டாம். அத்தியவசியமாக வெளியில் வரும் போது முகக்கவசம் அணிந்து சுகாதார நடவடிக்கையினை பின்பற்ற வேண்டும். கடந்த காலங்களில் கொரோனாவால் பதிக்கப்பட்டவர்கள் குறைந்திருந்தாலும் தற்போது அதிகரித்து வருகின்றது. மக்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து கொள்ளவும்.

எதிர்வரும் கிழமைகளில் நடைபெறவுள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு தொடர்பிலும் கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது. முப்படையினர் சுகாதார பிரிவினர் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த நிகழ்வுகளிலும் பொதுமக்கள் பங்குபற்றுவதை தவிர்த்து கொள்ளுமாறும் ஆலய நிர்வாகத்தினரால் கிரிகைகள் மட்டும் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment