25.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

முட்டையை சாப்பிடாமல் தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன?

முட்டை என்பது நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவாகும். ஆனால் இந்த முட்டையை நீங்கள் தவிர்க்கும் போது இதற்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் ஒரு குடும்பத்தில் ஆண்டுக்கு சராசரியாக 286 பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வு கூறுகிறது. நீங்கள் சைவ உணவு உண்பவர் ஆகவோ அல்லது நீங்கள் சைவ உணவுக்கு மாற விரும்புகிறீர்கள் என்றால், முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

முட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்ளாததன் காரணமாக அதில் உள்ள கலோரிகள் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். இதனால் ஒரு முழுமையான உணவு உண்ட உணர்வு உங்களுக்கு ஏற்படாமல் இருக்கலாம்.

முட்டைகளில் புரதச் சத்து அதிகமாக உள்ளது. இது சாப்பிட்டவுடன் ஒரு முழுமையான உணர்வை தருகிறது. குறைவான புரதம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது, உங்களுக்கு அடிக்கடி பசி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

உங்கள் உணவு பழக்க வழக்கங்களிலிருந்து முட்டையை நீக்கினால், அதற்கு பதிலாக அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

முட்டையை உணவில் இருந்து தவிர்ப்பவர்கள், அதிக கலோரி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள். முட்டைக்கு பதிலாக தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை காலை உணவுக்கு தேர்வு செய்கிறார்கள்.

உங்கள் உணவு பழக்க வழக்கங்கள் இருந்து முட்டையை நீங்கள் தவிக்கிறீர்கள் என்றால், உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச் சத்துகளையும் நீங்கள் இழக்கிறீர்கள் என்று அர்த்தம். முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. கோழிக்கு ஆளி விதை உணவாக அளிக்கப் பட்டு, அதிலிருந்து பெறப்படும் முட்டைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும். எனவே இதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் நாம் இந்த முறையின் மூலம் பெற முடியும்.

உங்கள் உணவில் இருந்து புரதச் சத்து நிறைந்த இந்த முட்டையை தவிர்ப்பதால், காலப்போக்கில் உங்களது உடற்பயிற்சிகளும் குறைவான செயல் திறன் கொண்டதாக மாறிவிடும். முட்டைகளில் உள்ள லுசின் தொகுப்புக்கு தேவையான ஒரு முக்கிய அமினோ அமிலமாகும். இது வயதுக்கு ஏற்ப குறைகிறது என்று நிபுணர் ஒருவர் கூறுகிறார். எனவே உங்கள் உணவில் இருந்து முட்டைகளை தவிர்க்கும் போது, தசை தொகுப்புகளை இழக்க நேரிடலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

முட்டையில் அதிக கொழுப்பு நிறைந்துள்ளதால், முட்டைகளை தவிர்ப்பதன் மூலம் இந்த கொழுப்பு நமக்கு கிடைக்காமல் போகிறது. நமது ரத்தத்தில் 20 சதவிகிதம் மட்டுமே நாம் உண்ணும் பொருட்களில் இருந்து கிடைக்கிறது மற்ற 80 சதவிகிதம் கல்லீரல் மூலம் தயாரிக்கப்படுகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக கொலஸ்ட்ரால் அளவு சில மாறுபாடுகள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment