29.3 C
Jaffna
March 29, 2024
விளையாட்டு

‘CSK வீரர்கள் எல்லோரும் வீடு போய் சேர்ந்த பிறகுதான் நான் வீட்டுக்குப் போவேன்’; தோனி!

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டதால் இந்திய வீரர்கள் எல்லோரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கப்டனான விராட் கோலி நேற்று டெல்லியில் உள்ள தன் இல்லம் போய் சேர்ந்தார்.

கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், ”சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எல்லோரும் பத்திரமாக வீடு போய் சேர்ந்தபிறகுதான் நான் என் என் வீட்டுக்குப்போவேன்” என்று சொல்லியிருக்கிறார் சிஎஸ்கே கப்டன் மகேந்திர சிங் தோனி.

நேற்று காலை வீடியோ கொன்ஃபிரன்ஸ் மூலம் சிஎஸ்கே வீரர்களுடன் பேசிய தோனி, ”முதலில் வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முக்கியத்துவம் தர வேண்டும். அதன்பிறகு இந்திய வீரர்கள் தங்கள் வீடுகளுக்குப் போகலாம். நம் அணியின் வீரர்கள் எல்லோரும் தங்கள் வீடுகளுக்குச் சென்ற பிறகுதான் நான் ராஞ்சிக்குப் போவேன். அதுவரை டெல்லியில்தான் இருப்பேன்” என்று பேசியிருக்கிறார் தோனி. அவர் தற்போது டெல்லியில் ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்கள் அணியில் உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் வீடு திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்திருக்கிறது. நேற்று காலை டெல்லியில் இருந்து பல சிஎஸ்கே வீரர்களுடன் புறப்பட்ட இந்த விமானம் ராஜ்கோட், மும்பை, பெங்களூரு மற்றும் சென்னையில் வீரர்களை கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.

மைக்கேல் ஹஸிக்கு கொரோனா பொசிட்டிவ் என்பதால் அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்க வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்குப் போய் சேர ஆரம்பித்துவிட்டார்கள். சென்னையில் இருந்த இங்கிலாந்து வீரர்கள் சாம் கரண் மற்றும் மொயின் அலி நேற்று காலை லண்டன் சென்றுவிட்டார்கள். அதேப்போல் டுப்ளெஸ்ஸி, இங்கிடி, இம்ரான் தாஹிர், பந்துவீச்சு பயிற்சியாள் எரிக் சிம்மன்ஸ் அனைவரும் தென்னாபிரிக்காவுக்கு சென்றுவிட்டனர். பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் நியூஸிலாந்து செல்கிறார்.

இன்று மாலை தோனி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ராஞ்சி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment