மேஷ ராசியில் இருக்கும் பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் மிகவும் நல்ல மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். தங்களின் மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளமாட்டார்கள். வாழ்க்கையில் இளமை பருவத்தில் அதாவது வாலிப பருவத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
மேஷ ராசியில் பரணி நடத்திரத்தின் நான்கு பாதங்கள் அமைந்துள்ளன. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் தரணியை ஆள்வார்கள் என்பது பழமொழி. அப்படிப்பட்ட பரணி நட்சத்திரம் எப்படிப்பட்ட குண நலன்களையும், தங்கள் வாழ்வில் எப்படிப்பட்ட பலன்களை அடைவார்கள் என்பதைப் பார்ப்போம்.
செவ்வாய் பகவான் ஆட்சி செய்யக்கூடிய மேஷ ராசியில் இருக்கும் பரணி நட்சத்திர அதிபதியாக சுக்கிர பகவான் இருக்கிறார்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் நல்ல மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்தும் குணம் கொண்டவர்கள். அதே சமயம் தங்களின் மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளமாட்டார்கள். பொதுவாக பரணி நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் வாழ்க்கையில் இளமை பருவத்தில் அதாவது வாலிப பருவத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
அதுமட்டுமல்லாமல் இவர்களின் குடும்ப வாழ்க்கை மிக சிறப்பாக அமையும். செல்வ செழிப்போடு இருப்பார்கள். சீரும் சிறப்போடும் வாழக்கூடிய இவர்கள், சுக்கிரனை அதிபதியாக கொண்டதால் இவர்கள் ஆடம்பரமாக, வசதியை விரும்புவார்கள். இந்த நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் தொப்புளில் எள் வடிவில் சிறிய மச்சம் இருக்கும்.
பரணி நட்சத்திர அதிதேவதை – துர்க்கை அம்மன்
பரிகார தெய்வம் – துர்க்கை அம்மன்
நட்சத்திர குணம் – மனுஷகணம்
நட்சத்திரத்திற்குரிய மரம் (விருட்சம்) – நெல்லி (பாலில்லா மரம்)
மிருகம் – ஆண் யானை
பட்சி (பறவை) – காகம்
கோத்திரம் – விசுவாமித்திரர்