அமைச்சர் காமினி லொக்குகேவின் மருமகன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துஷார பெரேரா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாதம் 19 ஆம் திகதி முதல் பிலியந்தல பொலிஸ் பிரிவில் உள்ள பிலியந்தல மற்றும் கெஸ்பேவ மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் 400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கெஸ்பேவ சுகாதார அலுவலர் தெரிவித்தார்.
தல்தர கிழக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள கஹபொல பகுதியில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலை காரணமாக பிலியந்தலவை தனிமைப்படுத்த சுகாதாரத் துறை எடுத்த நடவடிக்கைகளை, அமைச்சர் லொக்குகே தலையிட்டு தனிமைப்படுத்தலை விலக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1