பொதுமன்னிப்பு கோரும் கடிதத்தில் கையெழுத்திட்ட ரஞ்சன்!

Date:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொது மன்னிப்பு கோரும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

ரஞ்சன் கையெழுத்திட்ட கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சட்டத்தரணி ஆஷான் பெர்னாண்டோ நேற்று (03) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்தார்.

இந்த ஆவணங்களை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அறியப்படுகிறது.

ரஞ்சனிற்கு மன்னிப்பு வழங்கும்படி ஜனாதிபதியிடம், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தொலைபேசியில் கோரியிருந்தார். இதற்கான ஆவணங்களை முறைப்படி சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி கேட்டிருந்தார். இதன்படி, பொதுமன்னிப்பு கோரும் கடிதத்தில்  ரஞ்சன் ராமநாயக்க கையெழுத்திட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...

ஈரானுடன் இணக்கமாக செயற்படுகிறோம்!

ஈரானுடன் அமெரிக்கா மிகவும் இணக்கமாகச் செயல்படுவதாகவும், கத்தாரில் சமீபத்தில் நடந்த சந்திப்புகள்...

யாழ் பல்கலை பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்