26.1 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

நாடு முழுவதும் கொள்கலன்களிலான 500 வெளிப்புற உடற்பயிற்சி நிலையங்கள்!

நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கொள்கலன்களை பயன்படுத்தி வெளியரங்க உடற்பயிற்சி நிலையங்கள் 500 ஐ அமைக்க அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு-

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கொள்கலன்களைப் பயன்படுத்தி வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்கள் (Container Based Cross –Fit Gym) 500 இனை நிறுவுதல்

உற்சாகமான வாழ்க்கை முறைக்கு இளைஞர் பரம்பரையை பழக்கப்படுத்துவதற்காகவும், விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கான உந்துதலை வழங்கும் நோக்கில் ‘வெற்றி கொள்வோம்’ எனும் தொனிப்பொருளில் கொள்கலன்களைப் பயன்படுத்தி வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்கள் (Container Based Cross –Fit Gym)  500 இனை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான மதிப்பீட்டு செலவு 625 மில்லியன்களாவதுடன், திட்டத்தின் மூலம் வருடாந்தம் 100,000 பொதுமக்களுக்கும் 5000 விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கும் நன்மையடைவதுடன், குறித்த தேக ஆரோக்கிய நிலையங்களைக் கொண்டு நடாத்தும் பொறுப்பை பிரதேச ரீதியாக இளைஞர் கழகங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கும் ஒப்படைப்பதற்கும், குறைந்தது ஒரு பயிற்றுவிப்பாளரை ஈடுபடுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டம் 2021-2022 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தவும், 2021 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 250 இடங்களில் கொள்கலன்களைப் பயன்படுத்தி வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்களை நிர்மாணிப்பதற்காகவும், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நெற்றிக் கண்ணைத் திறத்தல்

Pagetamil

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதியானது!

Pagetamil

யாழில் 214 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

Pagetamil

யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு!

Pagetamil

மாத்தளை இஹல ஹரஸ்கம கிராமத்தில் குரங்குகளுக்கு கருத்தடை

east pagetamil

Leave a Comment